காயங்களுக்கு ஆறுதலாக.. இந்த ஐபிஎல் கோப்பையை மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 28, 2018 05:23 PM

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை அணி 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த சென்னை கேப்டன் தோனிக்கு, தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரசிகர்களை சந்திக்க கோப்பையுடன் சென்னையை வந்தடைந்துள்ளனர். இந்த நிலையில் காயங்களுக்கு ஆறுதலாக இந்த கோப்பையை சமர்ப்பிக்கிறோம் என, சென்னை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பல காயங்களுக்கு ஆறுதலாக இந்த @ipl கோப்பையை @ChennaiIPL மக்களுக்கு சமர்ப்பணம் செயகின்றோம். காரியம் கை கைக்கூடியது.உங்கள் பாசத்திற்கும்! நேசத்திற்கும்! தலைவணங்குகின்றேன்.தாய் போல் எமை சீராட்டிய தமிழ்நாடு வாழியவே.அனைத்து துன்பங்களையும் மறந்து எங்கள் தோளோடு தோள் நின்றமைக்கு #நன்றி,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 'சாதிக்க வயது தடையல்ல'.. விமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த கூல் தோனி!
- 'ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி'.. வெற்றிக்குப்பின் முதன்முறையாக பேசிய தோனி!
- 'அடுத்த வருடம் கடும் போட்டியாளராக இருப்போம்'.. சென்னையை வாழ்த்திய ஹைதராபாத்!
- வாரிசுகளுடன் 'வெற்றியை' கொண்டாடிய சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.. வீடியோ உள்ளே!
- 'குருதியில் மஞ்சளேந்தி கோப்பை வென்றோம்'.. சென்னையை வாழ்த்திய பிரபலம்!
- IPL 2018 Final: CSK scripts the best comeback ever!
- சன்ரைசர்சை 4-வது முறையாக வீழ்த்தி.. 3-வது முறையாக கோப்பை வென்றது கிங்ஸ்!
- 'பெஸ்ட் பவுலிங் யூனி'ட்டுக்கு எதிராக 'சதமடித்த' வாட்சன்!
- ஐபிஎல் 2018: வெற்றிபெறும் அணிக்கு 'பரிசுத்தொகை' எவ்வளவு தெரியுமா?
- அனைத்து 'பைக்குகளிலும்' ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது: தோனி