'அடுத்த வருடம் கடும் போட்டியாளராக இருப்போம்'.. சென்னையை வாழ்த்திய ஹைதராபாத்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 28, 2018 12:39 AM

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில்,முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி+கோப்பை என்ற இலக்குடன், களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 181 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3-வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று மகுடம் சூடியுள்ளது.
சென்னை அணியின் இந்த வெற்றிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சென்னை அணியை வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அணியிடம் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில், "3-வது முறையாக கோப்பை வென்ற சென்னை அணிக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் ஐபிஎல் இறுதிப்போட்டியை விளையாடியதில் மகிழ்ச்சி. அடுத்த வருடம் உங்களுக்கு கடும் போட்டியாளராகத் திகழ்வோம் என உறுதி அளிக்கிறோம்," என தெரிவித்துள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
