4-வது முறையாக சன்ரைசர்சை வீழ்த்தி... 'கோப்பையை' வெல்லுமா தோனி படை?

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: CSK won the toss and choose to field

இன்றிரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.


லீக் போட்டிகளின் 2 ஆட்டங்கள் மற்றும் குவாலிஃபையர் 1 ஆகிய போட்டிகளில் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதனால் சென்னை அணியை பழிவாங்க ஹைதராபாத் அணி முயலும்.

 

அதேநேரம் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசாக ஐபிஎல் கோப்பை கிடைக்கும் என்பதால், 2 அணிகளும் அதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-


சென்னை சூப்பர்  கிங்ஸ்: தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், லுங்கி நிகிடி, கரண் சர்மா.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஷிகர் தவான், தீபக் ஹூடா, சாஹிப் அல்ஹசன், ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, யூசுப் பதான், ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, கார்லோஸ் பிரத்வெயிட்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: CSK won the toss and choose to field | தமிழ் News.