'சாதிக்க வயது தடையல்ல'.. விமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த கூல் தோனி!
Home > News Shots > தமிழ்By Manjula | May 28, 2018 12:18 PM

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, சென்னை அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:-
அனைத்து வெற்றிகளுமே சிறந்தது தான். இதில் எது சிறந்தது? எது பிடித்தது? என்பதை தேர்வு செய்வது கடினம். இன்றைய தேதி 27, எண் ஜெர்சி எண் 7, இது எங்களது 7-வது பைனல். வயது பற்றி நிறைய பேசியாகி விட்டது. ஆனால் உடல்தகுதி தான் முக்கியம். வயது என்பது ஒரு எண் மட்டுமே. ஆனால் உடல்தகுதியில் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
சென்னை அணி வீரர்களின் வயது குறித்து அனைவரும் விமர்சித்தனர். ஆனால் சாதிக்க வயது முக்கியமல்ல, உடற்தகுதி தான் முக்கியம் என்பதை அவர்கள் அனைவரும் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை.சென்னைக்குச் செல்கிறோம். முடிவு என்னவாக இருந்திருந்தாலும் சென்னைக்குச் சென்று ரசிகர்களையும் அணிக்கு நெருக்கமானவர்களையும் சந்திக்க வேண்டும். விடுதி ஒன்றில் அனைவரும் ஒன்றிணைந்து மாலைப்பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கவிருக்கிறோம்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
