'சென்னையில் உனக்கு பாதுகாப்பில்லை'.. நம்பர் 1 வீராங்கனைக்கு தடைபோட்ட பெற்றோர்!

Home > News Shots > தமிழ்

By |
Swiss squash player skips world junior championship in Chennai

சென்னையில்  நடைபெற்றுவரும்  ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என சுவிஸ் வீராங்கனைக்கு, பெற்றோர் தடை போட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

கடந்த 18-ம் தேதி சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது.இதில் 28 உலக நாடுகளிலிருந்து 171 ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

 

இந்தநிலையில் இந்த போட்டி தொடரிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் நம்பர் 1 வீராங்கனையான அம்ப்ரே அலிங்ஸ் விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை அதனால் நீ அங்கு செல்ல வேண்டாம் என அவரது பெற்றோர் கூறியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.