குற்றவாளிகளுக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி?.. திடுக்கிடும் தகவல்கள்!

Home > News Shots > தமிழ்

By |
reports reveal how the lift operator who raped 11-year-old learnt to

சென்னை அயனாவரத்தை சேர்ந்த காது கேளாத 11 வயது சிறுமியை, சுமார் 17 பேர் 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் குடியிருப்பை சேர்ந்த 17 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட  17 பேரையும் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து `17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்தநிலையில் குற்றவாளிகள் மயக்க ஊசியை சிறுமியிடம் பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மயக்க ஊசி பயன்படுத்தியது யார்? என போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் ஆபரேட்டராக பணியாற்றிய ரவிக்குமார்(66) என்பவர் இதற்கு முன் அயனாவரம் பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் வேலை செய்துள்ளார். அங்கு வேலை பார்த்தபோது அவருக்கு மயக்க ஊசி மற்றும் மருந்து தொடர்பான தகவல்கள் கிடைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

இந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.