வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன் மற்றும் மான்,புறா படங்கள்..தேர்தல் ஆணையம் அதிர்ச்சி !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 25, 2018 04:31 PM
People in UP district identified with sunny leone in voters- list

உத்தர பிரதேச வாக்காளர் பட்டியலில் பிரபல இந்தி நடிகை  சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில்  ஏற்படும் குளறுபடிகளால் அடிக்கடி பெரும் சர்ச்சைகள் வெடித்தபடி உள்ளன.

 

வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயருக்கு பதிலாக வேறொருவரின் பெயரும்,புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவரின் புகைப்படமும் இருப்பது மிகவும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கியதற்கு பிறகு இந்த குளறுபடிகள் அதிகரித்து வருகின்றது.

 

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக வாக்காளர் பட்டியலில்  சன்னி லியோனின் படம் இடம்பெற்று தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது உத்தர பிரதேச மாநிலத்தில்.அங்கு மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதிலாக சன்னி லியோன் படம் இடம்பெற்றிருக்கிறது.

 

உத்தரபிரதேச மாநிலத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் வெளியாகியுள்ளன.

 

அதில் 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.