All
Looks like you've blocked notifications!

ஊடகத்துறையில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வரும் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் பிஹைண்ட்வுட்ஸ் ஏர் என்னும் புதிய யூடியூப் சேனலை இன்று தொடங்கியுள்ளது.

 

'பிஹைண்ட்வுட்ஸ் ஏர்' யூடியூப் சேனலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

 

வணக்கம். ஏறக்குறைய 14 ஆண்டுகாலமாக டிஜிட்டல் துறையிலே பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கக் கூடிய 'பிஹைண்ட்வுட்ஸ்' நிறுவனம், இன்றைக்குத் தனியாக ஒரு ஊடகத்தைத் தொடங்கவிருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது.

 

'பிஹைண்ட்வுட்ஸ்' ஊடகத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில், அதையும் தாண்டி இருக்கக்கூடிய இந்தியத் திருநாட்டில், ஏன் அகில உலகளவில் இருக்கக்கூடிய செய்திகளை மிக சிறப்பான வகையில் வெளியிட வேண்டும்.

 

எந்தவித அரசியல் காழ்ப்புணர்வும் இல்லாமல் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில், நடுநிலையோடு தங்களுடைய கருத்துக்களை-தங்களுடைய செய்திகளை, 'பிஹைண்ட்வுட்ஸ்' நிறுவனம் வெளியிடுவார்கள் என நான் உளமார நம்புகிறேன்.

 

அப்படி நடுநிலையோடு செய்திகளை வெளியிடக்கூடிய நேரத்தில், நிச்சயமாக அதற்கு 'திராவிட முன்னேற்றக் கழகம்' துணை நிற்கும். அதற்கு முன்கூட்டியே எனது வாழ்த்துகளை நான் 'பிஹைண்ட்வுட்ஸ்' நிறுவனத்துக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

'பிஹைண்ட்வுட்ஸ் ஏர்' யூடியூப் சேனலை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

BY MANJULA | FEB 16, 2018 9:22 AM #MKSTALIN #DMK #BEHINDWOODSAIR #YOUTUBECHANNEL #முகஸ்டாலின் #திமுக #பிஹைண்ட்வுட்ஸ்ஏர் #யூடியூப்சேனல் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People