'அம்மா'உங்கள கிட்ட இருந்து பாத்துக்கணும்'...சொல்லிட்டு போனவன் திரும்ப வரவே இல்ல!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 16, 2019 03:08 PM

வயதான பெற்றோரை கூட இருந்து கவனித்து கொள்வதற்காக,விருப்ப ஓய்வு பெற இருந்த சிஆர்பிஎஃப் வீரரும் தாக்குதலில் பலியாகி இருப்பது,அவரது குடும்பத்தையே புரட்டி போட்டுள்ளது.

Martyred jawan Guru had plan of taking VRS take care of ageing parents

காஷ்மீர் மாநிலத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தற்கொலை படைத்தாக்குதலில்,40க்கும் மேற்பட்ட  சிஆர்பிஎஃப்  வீரர்கள் வீரமரணமடைந்தார்கள்.இந்த கொடூர தாக்குதலில்,கர்நாடகா மாநிலம் மத்தூர் அருகில் உள்ள குடிகிரி என்ற கிராமத்தை சேர்ந்த குரு என்ற வீரரும் ஒருவர்.மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவரான குரு சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து பணியற்ற வேண்டும் என ஆர்வமாக இருந்துள்ளார்.இதனால் கடந்த 2011-ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் பணியில் சேர்ந்துள்ளார்.

குருவின் பெற்றோர்கள் துணிகளை சலவை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.குரு சிஆர்பிஎஃப் பணியில்  சேர்ந்த பின்பு தான் பொருளாதாரத்திலும் சற்று முன்னேறியிருக்கிறார்கள்.இதனிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான்,கலாவதி என்ற பெண்ணுடன் குருவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.குருவின் இரண்டு தம்பிகளும்,குருவின் மனைவியும் அவரின் வயதான பெற்றோரை கவனித்து வந்திருக்கிறார்கள்.

இருப்பினும் தனது பெற்றோரை தானே கூட இருந்து கவனித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினால்,விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு கிராமத்திற்கு சென்று விட வேன்டும் என எண்ணிக்கொண்டிருந்தார் குரு.இதனால் சமீபத்தில் தான் சொந்த ஊரில் வீடு காட்டினார்.இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன் குடும்பத்தை பார்ப்பதற்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார் குரு. அங்கு மனைவி, தம்பி, அம்மா, அப்பா என அனைவரிடத்திலும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய நாளே அவரது இறுதி நாளாக அமைந்துவிட்டது.அவரது மரணம் வயதான அவரது பெற்றோர் மற்றும் மனைவி ஆகியோரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பம் இருப்பதாக குருவின் உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மறைந்த குருவின் உடலை அடக்கம் செய்யக் கூட அவரது குடும்பத்தினருக்கு நிலம் இல்லாத நிலையில்,அரசு அதிகாரிகள் அரசு நிலத்தை குருவின் உடலை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கியுள்ளார்கள்.மேலும் உயிரிழந்த குருவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

Tags : #PULWAMAATTACK #CRPFJAWANS #JAMMUANDKASHMIR #MARTYRED JAWAN H. GURU