'ஒழுங்கா சாப்படலன்னா 50 ரூபாய் அபராதம்'..மிரட்டும் ஓனர்.. வைரலாகும் ஹோட்டல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 10, 2019 07:45 PM

பலகோடி ரூபாய் முதலீட்டில் படமெடுக்கும் அளவுக்கு உலகின் பல நாடுகள் வளர்ந்த நிலையில் உணவுப் பஞ்சம் தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் வீணாகும் உணவு ஒரு பக்கம், அந்த சிறிதளவு உணவும் கூட இல்லாமல் செத்து மடியும் மக்கள் ஒரு பக்கம் என பூமியின் சமநிலை குறைவதற்கு உணவுக் கிடைக்கா நிலை ஒரு காரணமாக இருக்கிறது.

if customer wastes food, they will be fined 50 rupees, Says HotelOwner

ஆனால் உண்மையைச் சொன்னால் இது உணவுப்பற்றாக்குறை அல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருவர் இரண்டு சப்பாத்திகளுக்கு மேல் உண்ண முடியாமல், மீதமுள்ளவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார். அதனால் இன்னொருவருக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது யதார்த்தமான புரிதல் அல்ல. உண்மையில் உணவை ஒருவர் வீணடிப்பதால் அந்த உணவு இன்னொருவருக்கு கிடைக்காமல் இல்லை. காரணம் உணவுப்பற்றாக்குறையே அல்ல.

ஆகையால் உணவு கிடைக்காமல் தவிப்பவர்கள் மீதான அக்கறை உள்ளவர்கள் பலரும் குறிப்பிட்ட சில உணவகங்களுக்குச் சென்று, மீந்திருக்கும் உணவுகளை வெளியில் எடுத்துச் சென்று இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உன்னதமான செயல்களைச் செய்து வருகின்றனர். ஆனால் உணவை சாப்பிடத் தொடங்கிவிட்டு, பின்னர் உண்ணாமல் வீணடிப்பதால் அதனை குப்பையில்தான் கொட்ட வேண்டியுள்ளது. இதனை முறைப்படுத்துவதற்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்திருக்கிறார் தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்.

அதன்படி தனது ஹோட்டலில் உணவுண்ண வருபவர்கள் உணவை வீணடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்து வருகிறார். லிங்காலால் கேதாரி என்கிற பெயருடைய அந்த உரிமையாளர் இவ்வாறு வசூலித்த தொகையை குழந்தைகள் நல காப்பகம் ஒன்றுக்கு கொடுக்கிறார். தொடர்ந்து உணவை மிச்சம் வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவின் அருமையை உணர்த்தவே தான் சற்று கடுமையாக நடந்துகொண்டதாகவும், பின்னர் அவரை பலர் புரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

Tags : #HOTEL #FOOD #WASTE