'வயலுக்குள் புகுந்த புலி'...விவசாயியின் திக் திக் நிமிடங்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 30, 2018 03:08 PM
Farmer Finds Tiger Inside paddy field videos goes viral

விவசாய வேலையை முடித்து விட்டு திரும்பும்போது வயலுக்குள் நின்ற புலியை கண்டு அதிர்ந்து போனார் விவசாயி ஒருவர்.அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.இச்சம்பவம் சீனாவில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஃபுயான் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது.

 

பார்க் யாஜூன் என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் அரிசி சாகுபடி செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இரவு,பார்க் தன்னுடைய வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது சாலையின் அருகில் இருக்கும் வயல் பகுதியில், ஏதோ மிருகம் வழியில் நின்று கொண்டிருப்பதை கண்ட அவர் அதன் அருகில் சென்றார்.அருகில் சென்ற போது தான் அது புலி என அவருக்கு தெரிந்தது.அதை கண்டு அதிர்ந்து போன பார்க்,தனது வாகனத்தை விட்டு இறங்காமல் வாகனத்திலேயே அமர்ந்து கொண்டார்.

 

மேலும் காருக்குள் இருந்தபடியே புலியின் அசைவுகளை தனது மொபைல் போனில் பதிவு செய்ய ஆரம்பித்தார்.அதோடு தனது நண்பர்களுக்கும்,காவல்துறைக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார்.உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள்.ஆனால் காவல்துறையினர் வருவதற்குள் புலி அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டது.

 

தற்போது பார்க் யாஜூன் எடுத்த வீடியோ காட்சிகள் சீன வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #FARMER #TIGER INSIDE RICE FIELD #SIBERIAN TIGER