'உண்மையிலே தல கிரேட் ப்ரோ'...தோனி குறித்து நெகிழ்ந்த தமிழக ஆல்ரவுண்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Feb 23, 2019 12:36 PM

இந்திய முன்னாள் கேப்டன் தோனி வழங்கிய அறிவுரைகள் எப்போதும் மறவாமல் என்னுடைய மனதில் இருக்கும் என தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

Dhoni was telling me to bowl more on the stumps says Vijay Shankar

இந்திய அணிக்கு ஆடிவரும் அவர்,ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது ''முதல் முறையாக அவருடன் பேச வாய்ப்பு கிடைத்ததே ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.ஹேமில்டன் நடந்த ஒருநாள் போட்டியில் நானும் தோனியும் ஆடவில்லை.அப்போது தான் அவருடன் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது அவர் என்னிடம்  ‘உன்னுடைய பேட்டிங், பீல்டிங் குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை.ஆனால் உன்னுடைய பந்து வீச்சு இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறன். அதுவும் உனக்கு இருக்கும் உடல் அமைப்புக்கு இன்னும் கொஞ்சம் வேகம் இருந்தால் நன்றாக இருக்கும்.

சில மாற்றங்களை மட்டும் செய்து உனது பௌலிங்கை கொஞ்சம் வலு கூட்டினால்,இந்திய அணியில் உனக்கேன ஒரு இடம் நிச்சயம் இருக்கும்'' என தோனி தெரிவித்ததாக விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி ஆடிய விதத்திலிருந்து நான் நிறைய கற்று கொண்டேன்.

என்ன நெருக்கடி இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடுவதில் தோனியை மிஞ்சுவதற்கு ஒரு வீரர் இல்லை என நினைக்குறேன்.எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதாக கடந்து செல்லும் திறனை அவரிடம் இருந்து தான் நான் கற்று கொண்டேன் என விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #BCCI #MSDHONI #VIJAY SHANKAR #ALL-ROUNDER