‘வேகப்பந்து வீச்சாளர் நீக்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு’.. திடீர் அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 21, 2019 05:49 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

IND vs AUS: Pandya ruled out of T20I & ODI series, due to back issue

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வரவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது.

அதில், வரவிருக்கு உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு இளம் வீரர்கள் பலருக்கு இத்தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் முன்னணி வீரரான தினேஷ் கார்த்தியை அணியில் சேர்க்காதது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவும் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடியது. அப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தைத் தெரிவித்தாதல், ஹர்திக் பாண்டியா அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்  நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அந்தத் தொடரில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முழுத் தொடரிலும் அவர் விளைடாமாட்டார் எனவும் அவருக்கு பதில் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags : #INDVAUS #ICC #BCCI #HARDIKPANDYA #JADEJA