'ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு'.... பெற்ற தாயை அடித்துக்கொன்ற மகள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 04, 2018 05:28 PM

டெல்லி கவி நகர் பகுதியைச் சேர்ந்தவர ரேஷ்மி ரானா(21). இவருக்கும், இவரது ஆசிரியைக்கும் இடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்துள்ளது.இதனையறிந்த ரேஷ்மியின் தாயார் மகளைக் கண்டித்துள்ளார். எனினும் ரேஷ்மி அதற்கு சிறிதும் செவி சாய்க்கவில்லை.
ஒருகட்டத்தில் தாயின் கண்டிப்பால் எரிச்சலடைந்த ரேஷ்மி தனது ஆசிரியை நிஷா கவுதமாவுடன் சேர்ந்து, தனது தாயை இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலை நடந்த இடத்தை விட்டு இருவரும் தப்பியுள்ளனர்.
சம்பவ தினத்தன்று வீடு திரும்பிய ரேஷ்மியின் தந்தை சதீஷ்குமார் மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர்போலீசில் இதுகுறித்து சதீஷ் புகார் அளித்திருக்கிறார். மேலும், தனது மகள் ரேஷ்மி மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
சதீஷின் புகாரைத் தொடர்ந்து தலைமறைவான ரேஷ்மியைத் தேடிய டெல்லி போலீசார் அவரை காசியாபாத் ரெயில் நிலையத்தில் வைத்துக் கைது செய்தனர்.
விசாரணையில் ரேஷ்மி-நிஷா இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- நான் வாங்கி வைத்த மதுவை நீ குடிப்பதா? - பெற்ற தாயை கொன்ற மகன்!
- Woman kills daughter over alleged sexual relationship with her father
- Father stabs woman to death night before her wedding
- ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்தியதால் நண்பனைக் கொன்ற வாலிபர்!
- 21-year-old man stabs friend 54 times for mocking his English