'அவர் சொல்லித்தான் நான் அப்படி செஞ்சேன்...மத்தபடி நான் பாவம்ங்க'...உண்மையை போட்டுடைத்த ஆஸ்திரேலிய வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 26, 2018 03:21 PM
David Warner Was The Mastermind Of Ball-Tampering says Bancroft

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்த,வார்னர் தெரிவித்ததாக,பேன்கிராப்ட் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய துவக்க வீரர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியது.பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகி இருந்தன.இதற்காக அவருக்கு  9 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராப்ட் ''தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் போட்டியின் போது,சூழலுக்கு ஏற்றவாறு பந்தை மாற்றச் சொன்னது டேவிட் வார்னர் தான்.மேலும் வார்னர் சொன்னதால் தான் நான் பந்தை சேதப்படுத்தினேன்.மற்றபடி எனக்கு வேறு எதுவும் தெரியாது என கூறினார்.

 

இதனிடையே பேன்கிராப்ட்டின்  தண்டனைக்காலம் முடிவடைந்ததால்,பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிக்காக பிக்பேஷ் லீக்கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.