MIC Anthem Mobile BNS Banner
நள்ளிரவில் ஊரைச்சுற்றி பார்த்த முதலை: பொதுமக்கள் அச்சம்

அமராவதி அணையில் இருந்த முதலையொன்று நள்ளிரவில் ஊருக்குள் புகுந்ததால், பொதுமக்கள் அச்சம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை கீழே பார்ப்போம்.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் அமராவதி அணை உள்ளது. இங்குள்ள முதலைப்பண்ணையில் 90-க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில், அணையில் இருந்த முதலையொன்று நள்ளிரவில் திடீரென ஊருக்குள் புகுந்தது. முதலை ஊருக்குள் வந்ததைப் பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், சம்பவ இடத்தில் முதலையை சல்லடை போட்டுத் தேடினர். ஆனால் முதலை பிடிபடவில்லை. எனினும் அயராது  தேடிய வனத்துறையினர் மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருந்த முதலையை அதிகாலையில் கண்டுபிடித்தனர். 

 

நீண்ட போராட்டத்திற்குப்பின்  அந்த முதலையைப் பிடித்த வனத்துறையினர்  அதனை பாதுகாப்பாக அணையில் உள்ள முதலைப்பண்ணையில் விட்டனர்.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories