ஆசிய கோப்பை இந்தியா - பாகிஸ்தான் ஆட்ட அட்டவணைக்கு பிசிசிஐ எதிர்ப்பு

Home > News Shots > தமிழ்

By |
BCCI unhappy over Asia Cup schedule for India-Pakistan clash

செப்டம்பரில் தொடங்கும் ஆசிய கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டிருந்தது. செப்டம்பர் 15இல் தொடங்கும் இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை செப்டம்பர் 19 அன்று சந்திக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய நாள் அதாவது 18ஆம் தேதியன்று இந்தியா ஆசிய கோப்பைக்கு தகுதிபெறும் அணியை எதிர்கொள்கிறது.


இரணடு போட்டிகளுக்கும் இடையில் இடைவெளி இல்லாததால் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு நேரம் இருக்காது என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு அந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளும். இது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.


கிரிக்கெட் விளையாட்டில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு  ஓய்வு கிடைக்காத வகையில் அட்டவணை இருப்பதை ஒத்துக்கொள்ள முடியாதது என்றும் அதை மாற்ற வேண்டும் என்றும் பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

"இந்தத் தொடரை நடத்துபவர்களுக்கு வேண்டுமானால் இது பணம் கொழிக்கும் விளையாட்டாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இது மிகவும் முக்கியமான ஆட்டம். அனைவரையும் சமமாக பாவித்து அட்டவணை தயார் செய்யப்பட வேண்டும்," என்று பெயர் குறிப்பிடாத அந்த அதிகாரி வருத்தத்துடன் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #BCCI #ASIACUP2018 #INDVSPAK