இனி வாட்ஸ்ஆப் மூலம் ரயில் நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும்

Home > News Shots > India

By |
Now you can get updates on train status through WhatsApp MakeMyTrip

இனி வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே இரயில் குறித்த நிலவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இந்திய ரயில்வே மற்றும் தனியார் முன்பதிவு தளமான 'மேக்மைட்ரிப்' இடையிலான ஒப்பந்தத்தின்படி வாட்ஸ்ஆப்பில் கோரிக்கை வைப்பதின் மூலம் இரயில் நேரங்கள், முன்பதிவு நிலவரம், பயணச்சீட்டு ரத்து செய்தல் மற்றும் ரயில் வந்தடையும் பிளாட்பாரம் ஆகியவை குறித்த தகவல்கள் பயணிகளின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வந்து சேரும்.


இது தவிர பயணிகள் ஏற்கனவே 139 எண்ணிற்கு அழைப்பு கொடுத்து ரயில் குறித்த நிலவரங்களை அறிந்து கொள்ள முடியும். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் மூலமாக தகவல் பெறும் வசதியை வேண்டுபவர்கள் 7349389104 என்ற எண்ணை தங்கள் செல்போனில் பதிவு செய்து பின் தகவல் தேவைப்படும்போது குறிப்பிட்ட ரயிலின் எண்ணை இந்த போன் எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பினால் அந்த ரயிலின் நிலவரம் குறித்த தகவல்கள் பகிரப்படும்

Tags : #INDIANRAILWAY #WHATSAPP