ரித்திகா தமிழ் செல்வி - வினு
ரித்திகா தமிழ் செல்வி - வினு

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களுள் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா தமிழ் செல்வி. இவர் விஜய் டிவி பிரபலமான வினு என்பவரை சில நாட்களுக்கு முன் (20.11.2022) எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்  கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்யும் போட்டியாளராக கலந்து கொண்ட ரித்திகா அதன் பின்னர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பல விதமான கெட்டப்புகளை போட்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.