புகழ் - பென்ஸி
புகழ் - பென்ஸி

2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரபலமான புகழ், தொடக்கத்தில் பெண் வேடமிட்டு பல நகைச்சுவை கான்செப்ட்களில் நடித்து வந்தார்.

தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் புகழ், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.

இதனிடையே, புகழ் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து சில நாட்களுக்கு முன் (01.01.2022) திருமணம் செய்தார். இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் புகழ் திருமணம் செய்துகொண்டார்.