Petta USA All Banner

மக்களின் நிலையை உணர முடிகிறது. - விஜயகாந்த்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijayakant tweets about Tamil Nadu's historical cold weather

தமிழ் சினிமாவில் ஆக்ரோஷமான பஞ்ச் வசனங்கள், மேனரிசங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். மேலும்,தமிழ் சினிமாவில் அனைவராலும் நேசிக்கப்படக் கூடிய நடிகர்களில் ஒருவர் . மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத அவரது வெளிப்படையான குணம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

 

முழு நேர அரசியலில் ஈடுபட்டுவந்த நடிகர் விஜயகாந்த் தற்போது உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க பின்புலத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

மேலும், அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று குறிப்பிடும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது என்று பதிவிட்டுள்ளார்.