‘என்.ஜி.கே’ ஷூட்டிங்கை முடித்த ரகுல் ப்ரீத்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை நடிகை ரகுல் ப்ரீத் சிங் நிறைவு செய்துள்ளார்.

Rakul Preet Singh wraps Suriya's NGK Shoot

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர்.

இயக்குநர் செல்வராகவனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ‘என்.ஜி.கே’ படத்தின் ஷூட்டிங் தாமதமானதையடுத்து, இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா பிஸியானார்.

இதனிடையே, சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததுள்ளது. இது குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜீனியஸ் செல்வராகவன் மற்றும் சூர்யாவுடன் பணியாற்றியதில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். என்.ஜி.கே-வுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டீசர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்.14ம் தேதி ரிலீசாகும் என தயாரிப்புக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. ‘என்.ஜி.கே’ அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்திருந்த சூர்யா ரசிகர்கள் மத்தியில் ‘என்.ஜி.கே’ டீசர் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.