ஆஸ்கர் பரிந்துரையில் தமிழன்: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ரியல் பேட்மேன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு தமிழர் ஒருவர் நடித்த ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Period. End of Sentence, an India set film around menstruation lands Oscar 2019 nomination

91வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிளாக் பாந்தர், எ ஸ்டார் இஸ் பார்ன் ஆகிய திரைப்படங்கள் அதிகமான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கரின் பிற மொழி திரைப்படங்கள் பிரிவில் இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது. ரிமா தாஸ் இயக்கிய அசாமிய மொழி திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படத்தில் கிராமத்தில் வசிக்கும் சிறுமியின் மியூசிக்கல் பேண்ட் உருவாக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதை கூறும் வகையில் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழர் ஒருவர் நடித்த ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு Period. End of Sentence என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த நிஜ பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் நடித்துள்ளார். வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் பகுதியில் இருக்கும் பெண்கள், சிறுமிகள் தாங்கள் எதிர்க்கொள்ளும் மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்க, அவர்களது கிராமத்தில் பேட்மேஷினை உருவாக்குகிறார்கள் என்பதை விளக்கும் இப்படத்தை ஈரானிய-அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி இயக்கியுள்ளார்.

சுமார் 26 நிமிடங்கள் ஓடும் இந்த படம் Documentary short subject பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தமிழர்களை பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.

ஏற்கனவே அருணாச்சலம் முருகானந்ததின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் பாலிவுட்டில் ‘பேட்மேன்’ என்ற தலைப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அருணாச்சலமாக ‘2.0’-வில் நடித்த அக்ஷய்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.