பாலா, துருவ் விக்ரமின் வர்மா-வில் திருப்தியில்லை, புது டீமுடன் ரீ-ஷூட்-படக்குழு அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை முழுவதுமாக மீண்டும் ஷூட் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Dhruv Vikram's debut film 'Varma' to be reshoot completely- Official announcement here

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அமோக வெற்றிப்பெற்றதையடுத்து, இப்படத்தை ‘வர்மா’ என்ற தலைப்பில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் போன்ற அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இறுதி வெர்ஷனில் திருப்தி இல்லை என கருதிய தயாரிப்பு நிறுவனமான இ4 எண்டர்டெய்ன்மென்ட், துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க புதிய இயக்குநர் மற்றும் இதர கதாபாத்திரங்களுடன் மீண்டும் ‘வர்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய டீமுடன் அயராது உழைத்து ஜூன் 2019-ல் ‘வர்மா’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இ4 எண்டர்டெய்ன்மென்ட்  நிறுவனம் அறிவித்துள்ளது.