ரஜினியின் வில்லன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.o’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Akshay Kumar's fans tresspasses into his home, gets arrested

மும்பையில் உள்ள அக்ஷய்குமாரின் பங்களாவில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சித்துள்ளார். அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஹரியானவைச் சேர்ந்த அங்கித் கோஸ்வாமி என்ற அந்த இளைஞர் நடிகர் அக்ஷய்குமாரின் தீவிர ரசிகர் என்றும், கூகுள் செய்து அக்ஷய்குமாரின் வீட்டு முகவரியை தேடிக் கண்டுபிடித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

அக்ஷய்குமாரை நேரில் சந்தித்து அவரிடம் சினிமா வாய்ப்பு கேட்க வேண்டும் என்பதற்காகவே சுவர் ஏறி குதித்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அங்கித் கோஸ்வாமி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.