ஒரே ஒரு காசை என்ஜினில் சுண்டிவிட்ட இளைஞரால் விமானத்துக்கு ரூ.14 லட்சம் இழப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 27, 2019 11:33 AM

சீனாவில் பயணி ஒருவர் விமானம் பறக்கும் முன்பு, விமானம் நல்லபடியாக பறக்க வேண்டும் என என்ஜினில் சில்லறையைப் போட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Chinese man thrown coins into the plane\'s engine for good luck

லக்கி ஏர்லைன்ஸ் என்கிற விமான சேவை நிறுவனம் சீனாவில் இயங்கி வருகிறது. கடந்த 17 -ம் தேதி இந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று சீனாவில் உள்ள அன்கிங் அனூயி என்னும் இடத்தில் இருந்து குன்மிங் என்னும் இடத்துக்கு 162 பயணிகளுடன் செல்லத் தயாராக இருந்தது.

அப்போது விமானத்தின் இன்ஜினில் ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டறிந்த ஊழியர்கள் உடனடியாக விமானத்தை ரத்து செய்தனர். பின்னர் கோளாறு தொடர்பாக விசாரணை நடத்தியதில் ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

லூ என்கிற 28 வயதான ஒருவர் தனது மனைவி மற்றும் 1 வயது மகளுடன் லக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க வந்துள்ளார். அப்போது விமானம் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று கடவுளை வேண்டி ஒரு யுவான் சில்லறையை விமானத்தில் இடது என்ஜினில் லூ போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் 14 லட்சம் ரூபாய்க்கும் மேல் லக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : #CHINA #AIRLINES #FLIGHT #BIZARRE