தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட்ட பேருந்துக்கட்டணம் கடந்த 2௦-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த புதிய கட்டணம் குறித்த மனக்குமுறல்களை பொதுமக்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வு தங்களை வெகுவாகப் பாதிப்பதாகக் கூறி, சென்னை கவின் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுபோல தஞ்சை, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களிலும் பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
Read More News Stories

















