44,990 மதிப்புடைய ஸ்மார்ட்போன் வெறும் 1,947 ரூபாய்க்கு..அதிரடி ஆபர் !!

Home > News Shots > தமிழ்

By |
vivo giving away vivo nex rs-1947 independence day special offer

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு VIVO அதிரடி ஆபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் VIVO இந்தியாவில் மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளது. இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு VIVO NEX என்ற புதிய மாடல் மொபைல் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. இதன்  அதிநவீன தொழில்நுட்பமும் அதன் அமைப்பும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.44,990 விலையான VIVO NEX மொபைல் போனை வெறும் 1,947 ரூபாய்க்கு ஆன்லைன் பிளாஷ் சேல் (Online Flash Sale ) மூலம் விற்க முடிவு செய்துள்ளது.

 

இந்த அதிரடி ஆபர்  நாளை முதல் 3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை விற்பனை நடைபெற உள்ளது


அதுமட்டும் இல்லாமல் அதிரடி விலைகுறைப்பு மற்றும் பல்வேறு கேஸ்பேக்  ஆபர்களும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #SMARTPHONE #VIVO NEX