எனக்கெதற்கு ஆரஞ்சு தொப்பி?... கடும் விரக்தியில் விராட் கோலி!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 18, 2018 12:05 PM

நடப்பு ஐபிஎல்லில் கோலி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 201 ரன்களைக் குவித்திருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி கைப்பற்றியுள்ளார்.
நேற்று ஆரஞ்சு தொப்பி அவரிடம் அளிக்கப்பட்டது. எனினும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக கடும் விரக்தியில் இருந்த கோலி, "தற்போதைய தோல்வி நிலையில் இந்த ஆரஞ்சுத் தொப்பியை நான் அணிய விரும்பவில்லை.
மும்பை அணி நன்றாகப் பந்து வீசினர், நன்றாக விளையாடினர். அவர்கள் அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் இயன்ற வரை போராடினோம் ஆனால் அவர்கள் விக்கெட்டுகளை தேவைப்படும் போது வீழ்த்த முடியவில்லை,'' என தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று போராடிய கோலி, 92 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 'பெங்களூர்' பவுலர்களைப் புரட்டி எடுத்த 'மும்பை' பேட்ஸ்மேன்கள்.. கோலி அணிக்கு இலக்கு இதுதான்!
- RCB needs 214 to win match against Mumbai Indians
- அடுத்தடுத்து 'வீழ்ந்த' விக்கெட்டுகள்... 'முதல்' வெற்றியைப் பெறுமா மும்பை?
- ஐபிஎல் 2018: டெல்லி 'வேகப்பந்து வீச்சாளருக்கு' கொல்கத்தா போலீஸ் 'சம்மன்'
- 'சென்னையை மிஸ் பண்ணிடாதீங்க தோனி'... சொன்னது யார் தெரியுமா?