'சென்னையை மிஸ் பண்ணிடாதீங்க தோனி'... சொன்னது யார் தெரியுமா?
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 17, 2018 03:07 PM

காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின.
இதனால், சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி,சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் உடனான போட்டிக்குப் பின் புனே சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அங்குள்ள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
சென்னை அணியின் வீரர்கள் ஹோட்டலுக்கு செல்லும் வரை, புனே ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்று ஆதரவு கொடுத்துள்ளனர்.
மேலும், 'சென்னையை மிஸ் பண்ணிடாதீங்க தோனி' என புனே ரசிகர்கள் பதாகைகள் மூலம் தெரிவித்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
