'இடிந்து விழும் அபாயத்தில் திருச்சி-கொள்ளிடம் பாலம்'.. மாற்று வழியில் செல்ல எச்சரிக்கை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 16, 2018 03:34 PM
Trichy Kollidam bridge cracked due to heavy flow of water

காவிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.இதனால் திருச்சி காவிரி ஆற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

இந்த நிலையில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொள்ளிடம் பாலத்தின் 18-வது தூணில்  உள்ள இரும்புக்கம்பியில் விரிசல் விட்டுள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த அதிகாரிகள் பாலத்தினை ஆய்வு செய்து, அந்த பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.பாலம் வலுவிழந்து இருப்பதால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பாலம் இடிந்து விழலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதால்,அதிகாரிகள் 24 மணி நேரமும் அந்த பாலத்தினை கண்காணித்து வருகின்றனர்.மேலும் பாலத்தின் வழியாக செல்லும் மின்தடையும் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : #CAUVERY #TRICHY #KOLLIDAMBRIDGE