தாய்லாந்து 'குகையில்' இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் திடீர் 'துறவறம்'

Home > News Shots > தமிழ்

By |
Thailand Soccer boys enter monkhood

தாய்லாந்து நாட்டின் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, துறவு வாழ்க்கை பூண்டுள்ளனர்.

 

தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த 12 சிறுவர்கள் கடந்த ஜூன் 23-ம் தேதி  அங்குள்ள குகையொன்றில் சிக்கிக் கொண்டனர். கடும் போராட்டத்திற்குப் பின் சுமார் 17 நாட்கள் கழித்து அவர்கள் அனைவரும் பத்திரமாக அங்கிருந்து மீட்கப்பட்டனர்.

 

இந்தநிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களில் 11 பேர் தங்கள் தலையை மொட்டையடித்து காவி உடையணிந்து துறவறம் மேற்கொண்டுள்ளனர். இது 2-வது வாழ்வு எனக்கருதும் அவர்கள் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு சில நாட்களுக்கு இந்த துறவறத்தை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.

 

இதில் ஒரு சிறுவன் புத்த மதத்தை சேர்ந்தவன் இல்லை என்பதால் இந்த துறவறத்தை அவன் மேற்கொள்ளவில்லை.

Tags : #THAILAND