குரூப்-4 தேர்வில் தேதி மாற்றம்.. TNPSC திடீர் அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 15, 2018 12:52 PM
New Update on Group4 Exam Date from TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி தமிழக அரசு அலுவலகப் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது. 

 

அடுத்து நடக்கவிருக்கும் குரூப்-4 தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பையும் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக இந்தத் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

 

முன்னதாக ஆகஸ்டு16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருந்த காலம் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக, வரும் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை சான்றிதழை பதிவேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தேர்வில், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களின் நீண்ட பட்டியல் வரும் ஆகஸ்டு 27-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.  ஆங்காங்கே இருக்கும் அரசு இ -சேவை மையங்களின் உதவியுடன் இந்த சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்றும் அதில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 

Tags : #EXAM #TNPSC #TNPSCGROUP4