MIC Anthem Mobile BNS Banner
ஐபோனுக்கு பதிலாக 'டிடர்ஜென்ட் சோப்பை' அனுப்பி வைத்த பிளிப்கார்ட்

நவி மும்பையை சேர்ந்த தேம்ராஜ் மெகபூப் நாக்ராலி (26) என்னும் இளைஞர் பிளிப்கார்ட் இணையதளத்தில் ரூ.55 ஆயிரம் பணம் கட்டி, ஐபோன் 8 மொபைலொன்றை ஆர்டர் செய்துள்ளார். 

 

ஆர்டர் செய்த சில நாட்களில் பிளிப்கார்ட்டில் இருந்து தேம்ராஜ்க்கு பார்சல் ஒன்று வந்தது. ஆசையாகப் பிரித்துப் பார்த்தவர் அதிர்ந்து போனார். ஏனெனில் உள்ளே ஐபோனுக்குப் பதிலாகத்  துணி துவைக்கும் டிடர்ஜென்ட் சோப் இருந்துள்ளது.

 

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தேம்ராஜ் இந்த மோசடி குறித்து மும்பை பைகுல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories