அமைச்சர் விஜயபாஸ்கர்-டிஜிபி ராஜேந்திரன் வீடு உட்பட .. 40 இடங்களில் அதிரடி ரெய்டு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 05, 2018 12:19 PM
Gutkha scam: CBIs massive search operation at 40 places in Chennai

தமிழ்நாடு: சென்னையில் குட்கா முறைகேடு தொடர்பாக இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள், அதிரடியாக திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

 

இதுவரை சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீட்டில், மதுரவாயலில் உள்ள முன்னாள் டிஜிபி எஸ்.ஜார்ஜ் , மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்ற பிற போலீசார் விடுகளிலும் கூட குட்கா முறைகேடு தொடர்பாக ரெய்டு நடந்துள்ளது.

 

தகவல்களின்படி ஏறக்குறைய 40 இடங்களில் நடந்துவரும் இந்த குட்கா முறைகேடு கடந்த வருடம் குட்கா வணிகர் மாதவ் ராவோ வீட்டிலும் அலுவலகத்திலும் நடந்த சோதனையின் போது தொடங்கியது. அதில் கிடைத்த சில ரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே, இந்த விவகாரத்தோடு  தொடர்புடைய சில அரசியலாளர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வீட்டில் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.

 

திமுக பொருளாளர் துரைமுருகன் இதுபற்றிக் கூறுகையில் ‘எப்போதோ நடந்திருக்க வேண்டிய ரெய்டு இது’ என்று கூறியுள்ளார்.

Tags : #GUTKHASCAM #DGPRAJENDRAN