அமெரிக்காவில் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதில் சிக்கலா?: ட்ரம்ப் அதிரடி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 31, 2018 02:45 PM
Donald Trump\'s New Decision to end birthright citizenship

பிற நாடுகளில் பிறந்து அமெரிக்க வாழ் மக்களாக இருப்பவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை அளிப்பது அபத்தமான ஒன்று என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

பிரபல 'ஆக்சியாஸ் ஆன் ஹெச்பிஓ' (Axion on HBO) எனும் தொலைக்காட்சிக்கு ட்ரம்ப் பேட்டி அளித்தபோது, அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது அபத்தமானது என கூறியுள்ளதை அடுத்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் செய்தி தொடர்பாளர் பால் ரியான், இது சரியான முடிவல்ல என்று விமர்சித்துள்ளார்.

Tags : #DONALDTRUMP #USPRESIDENT #CITIZENSHIP