All
Looks like you've blocked notifications!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தி.மு.க சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தி.மு.க சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும். தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கும், முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

 

தமிழுக்கு கிடைக்க இருக்கும் ஹார்வர்டு இருக்கை ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதத்தை அளிக்கும்.விரைவில் தமிழ் இருக்கை அமைந்து 'தேமதுரத்தமிழோசை' உலகமெல்லாம் பரவ வகை செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம், மத்திய அரசு அலுவலகங்களில் ஒருநாள் தமிழ் நிச்சயம் அரியணை ஏறியே தீரும்," இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY MANJULA | FEB 6, 2018 6:30 PM #MKSTALIN #DMK #HARVARDTAMILCHAIR #ஹார்வர்டுதமிழ்இருக்கை #முகஸ்டாலின் #திமுக #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People