நாளை 'தல தீபாவளி' கொண்டாடப்போகும் நடிகர்-நடிகைகள் இவர்கள்தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 05, 2018 06:20 PM
#Diwali2018: Actor-Actress Thala Diwali celebration list here!

திருமண வாழ்வில் நுழைந்த தம்பதியருக்கு தல தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல். அதுவும் பிரபலங்கள் கொண்டாடும் தல தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். என்றென்றும் நினைவு கூறும் வகையில் அவர்களின் தல தீபாவளி கொண்டாட்டங்கள் அமைந்து இருக்கும்.

 

அந்தவகையில் நாளை தல தீபாவளி கொண்டாடப்போகும் பிரபலங்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

 

1.நமீதா - வீரா:

நடிகை நமீதா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி தனது நீண்டநாள் நண்பர் வீராவை திருமணம் செய்துகொண்டார்.

 

2. ஹிப்ஹாப் ஆதி-லட்சயா:

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவருமான ஹிப்ஹாப் ஆதி, லட்சயாவை கடந்த வருடம் நவம்பர் 30-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

 

3. கதிர்-சஞ்சனா:

'மதயானைக்கூட்டம்' புகழ் நடிகர் கதிர்-சஞ்சனா திருமணம் இந்த வருடம் மார்ச் 4-ம் தேதி நடைபெற்றது.

 

4. பாவனா-நவீன்:

நடிகை பாவனா-தயாரிப்பாளர் நவீன் திருமணம் இந்த வருடம் ஜனவரி மாதம் 22-ம் தேதி கேரளாவில் நடைபெற்றது.

 

5. ஸ்ரேயா சரண்-ஆண்ட்ரேய் கோஸ்ஷி:

தனது நீண்ட நாள் காதலர் ஆண்ட்ரேய் கோஷ்ஷியை, கடந்த மே மாதம் 12-ம் தேதி நடிகை ஸ்ரேயா சரண் திருமணம் செய்து கொண்டார்.

 

6. கீர்த்தனா- அக்ஷய் அக்கினேனி:

'கன்னத்தில் முத்தமிட்டால்' புகழ் கீர்த்தனா-அக்ஷய் அக்கினேனி திருமணம் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

7. சோனம் கபூர்-ஆனந்த் அஜூகா:

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர்-தொழிலதிபர் ஆனந்த் அஜுகாவை கடந்த மே மாதம் 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மொத்த பாலிவுட் உலகமும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தது.

 

8. மேக்னா ராஜ்-சிரஞ்சீவி சர்ஜா:

 

'காதல் சொல்ல வந்தேன்' புகழ் நடிகை மேக்னா ராஜ் கடந்த மே மாதம் 2-ம் தேதி தனது நண்பர் சிரஞ்சீவி சர்ஜாவை, இந்து மற்றும் கிறிஸ்டியன் முறைப்படி திருமணம்  செய்து கொண்டார்.

 

9. விராட் கோலி-அனுஷ்கா சர்மா:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். இந்திய கிரிக்கெட்டின் தளபதி, கிங் கோலி என புகழப்படும் கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலி அனுஷ்கா சர்மாவை கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்.

 

இவங்களோட சேர்ந்து நாளைக்கு 'தல' தீபாவளி கொண்டாடுற எல்லா தம்பதியருக்கும், பிஹைண்ட்வுட்ஸின் இனிய 'தல தீபாவளி' நல்வாழ்த்துக்கள்..

Tags : #KEERTHANAWEDDING #DIWALI2018