முக்கிய பொழுதுபோக்கு ஆப் உட்பட 16 ஆப்களில் இருந்து இத்தனை கோடி கணக்குகள் அம்பேல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 15, 2019 09:36 PM

கடந்த சில நாட்களாகவே பல இணையதளங்களில் தகவல்கள் திருடுபோவதாக பல இணைய பயன்பாட்டாளர்கள் புகார் கொடுத்துவந்தனர்.

Data of 61.7 crore users hacked by hackers through 16 Apps

இந்த நிலையில், தற்போது 16 வெப்சைட்டுகளில் ஹேக்கர்கள் புகுந்து சுமார் 61.7 கோடி கணக்குகளை நூதனமாக திருடியுள்ள அதிர்ச்சிகரமான உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாட்களில் பலரின் பொழுதை கழிக்க உதவுவது மட்டுமின்றி பலரின் வாழ்வாதார தேவையாகவும் இணையதள சேவை மாறியுள்ளது. இப்படியாக பல தொழில்முறைகள் நவீனமாக்கப்பட்ட சுழலில், அதற்கு ஈடாக திருட்டு, கொள்ளை போன்ற சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும் தொழில்களும் இணையத்தில் அமோகமாக வளர்ந்து வந்துள்ளன.

அதில் குறிப்பாக ஹேக்கிங் எனும் தொழில்நுட்பத்தை பயிலும் பல்வேறு நபர்கள் அந்த படிப்பினை நாச வேலைகள் பலவற்றிற்கும் உபயோகித்து வருகின்றனர். சமீப நாட்களில் டப்ஸ்மாஷ் போன்ற வெப்சைட்டுகள் பிரபலமானதை தொடர்ந்து, பலரும் தங்கள் முகவரி அடையாளத்தை வெப்சைட்டுகளில் பதிவிடுகின்றனர். இப்படி இணையத்தில் தகவல்கள் குவியத் தொடங்கிய நிலையில் பல ஹேக்கர்கள் அதில் பதியப்பட்ட தனிநபர் தகவல்களை நூதனமாக திருடி விற்கத் தொடங்கினர்.

இந்த தனிநபர் டேட்டா பேஸ்களுக்கு கிராக்கி அதிகமானதைத் தொடர்ந்து தற்போது இந்த ஹேக்கர்கள், டப்ஸ்மாஷ் உள்ளிட்ட 16 வெப்சைட்டுகளில் உள்ள 61.7 கோடி கணக்கர்களின் பெயர், முகவரி, இமெயில் போன்ற தகவல்களை திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், திருடிய தகவல்களை 20 ஆயிரம் பிட் காயின்களுக்கு சட்டவிரோதமான இணையதளங்களிடம் விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்திருக்கிறது. 

Tags : #HACKER #APP #ANDROID