ஹோட்டலில் பிறந்த பெண் குழந்தைக்கு அடித்த வாழ்நாள் 'ஜாக்பாட்'

Home > News Shots > தமிழ்

By |
Baby Girl To Get Free Food For Life

ஹோட்டல் ஒன்றில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் அந்த உணவகத்தில் உணவு இலவசம்  என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ராபர்ட் என்பவர் அவரது மனைவி மேகியுடன் அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான மேகி அங்கேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் ராபர்ட் விரிவாக எழுத தற்போது இணையத்தில் இவரது பதிவு வைரலாகி வருகிறது.

 

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம்,'' நாங்கள் உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதில்லை. குழந்தைகளை டெலிவரி செய்யவும் உதவி செய்கிறோம்,'' என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


மேலும் தங்களது உணவகத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உணவு இலவசம் என தெரிவித்துள்ள நிறுவனம், அந்த குழந்தைக்கான வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதம் அளித்துள்ளது.

Tags : #AMERICA