குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து: 5 பேர் பலி

Home > News Shots > India

By |
At least five dead after fire breaks out in residential building Mandi

இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் பற்றிய பெருந்தீயில் சிக்கி ஐந்து பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


மேலும் பலர் தீப்பற்றிய அந்த குடியிருப்புக் கட்டிடத்தில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த தீ விபத்து சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள நேர் சௌக் என்னும் இடத்தில் இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags : #FIREBREAKSOUT #FIREACCIDENT #HIMACHALPRADESH #MANDI