பாஜக-வில் இணைந்த தளபதி விஜய்யின் மாஜி ஹீரோயின்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘நெஞ்சினிலே’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை இஷா கோப்பிக்கார் அரசியலில் களமிறங்கியுள்ளார்.

Vijay's heroine Isha Kopikkar joins Politics

கடந்த 1998ம் ஆண்டு ‘சந்திரலேகா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இஷா கோப்பிக்கர், அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாசக்காற்றே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நெஞ்சினிலே’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த்தார். மேலும், பிரசாந்த்-சிம்ரன் நடித்த ‘ஜோடி’ படத்தில் சிறப்பு தோற்றத்திலும், விஜயகாந்தின் ‘நரசிம்மா’ நடித்துள்ளார்.

பாலிவுட்டிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள இஷா கோப்பிக்கர் தற்போது அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். இவருக்கு பாஜக-வின் மகளிர் போக்குவரத்து பிரிவின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஷா, ‘எனக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி. நாட்டிற்கு சேவையாற்ற தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகை இஷா கோபிகர் பாஜக-வில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.