STM Banner USA
VRV Banner USA

கர்நாடகாவை தெறிக்கவிடப்போகும் அஜித்தின் ‘விஸ்வாசம்’

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் அஜித் குமார்-நயன்தாரா நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ரிலீசாகவுள்ளது.

Ajith's Viswasam to be dubbed in Kannada gets title

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வரிசையில் அஜித்-சிவா கூட்டணியில் உருவான 4வது திரைப்படம் ‘விஸ்வாசம்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர், கோவை சரளா, தம்பி ராமையா, ரமேஷ் திலக், அனிகா, யோகிபாபு, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இப்படம் அஜித் ரசிகர்களையும் தாண்டி ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்த்து தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூல் ரீதியிலும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் கன்னடத்தில் ‘ஜகமல்லா’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு ரிலீசாகவுள்ளது. கர்நாடகாவிலும் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் இப்படத்தை ஸ்டூடியோ ஹரிசான் மற்றும் ஹரியூ கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

‘விஸ்வாசம்’ படத்தின் கன்னட டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.