ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலட்சுமி
ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலட்சுமி

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி (01.09.2022) திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வருகிறார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர்.