ஸ்வேதா பன்டேக்கர் - மால் மருகா
ஸ்வேதா பன்டேக்கர் - மால் மருகா

நடிகை ஸ்வேதா பன்டேக்கர், 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'ஆழ்வார்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பின்னர் பூவா தலையா, வள்ளுவனும் வாசுகியும், மீராவுடன் கிருஷ்ணன், நான்தான் பாலா, பூலோகம் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான  ‘மகள்’ சீரியலில் நடித்துள்ள  ஸ்வேதா,  'சந்திரலேகா' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் நடிகை ஸ்வேதா பன்டேக்கர் முன்னணி வேடத்தில் நடித்தார்.

இவர் சன் மியூசிக் தொகுப்பாளரான மால் மருகாவை திருமணம் செய்துள்ளார்.