தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் கலைஞர்கள் 314  பேருக்கு விருதுகளும் ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

tamilnadu film awards: தமிழ்நாடு அரசு விருதுகள் 2009 - 2014 | பரிசு விபரங்கள்
TAMILNADU FILM AWARDS: தமிழ்நாடு அரசு விருதுகள் 2009 - 2014 | பரிசு விபரங்கள்

2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரையிலான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.  இதில் மாண்புமிகு அமைச்சர்கள் பங்கேற்று தங்கப்பதக்கம் காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 இலட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படம் சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் எ 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ. 26,25,000/- (இருபத்தாறு இலட்சத்து இருபதைந்தாயிரம் மட்டும்) காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இதேபோல் சின்னத்திரை விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி, 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 இலட்சம் என 20 பேருக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.