காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

அஜித், விஜய், சூர்யா, மகேஷ்பாபு, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலம் ஆனவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த ஏப்ரல் மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.