நமீதா
நமீதா

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனவர் நமீதா. இவர் வீரேந்திரா சௌத்ரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் நடிகை நமீதா தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு, தான் கார்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நமீதா - வீரேந்திரா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் நடிகை நமீதா பகிர்ந்திருந்தார்.