இம்சை அரசன் 24ம் புலிகேசியில் யோகி பாபுவா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து வந்த ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்படத்தில் அவருக்கு பதிலாக யோகி பாபு நடிப்பதாக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

Yogibabu is not replacing Vadivelu in Imsai Arasan 24m Pulikesi, reports says

கடந்த 2006ம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற தலைப்பில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். பின், இவ்விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்படத்தின் விவகாரம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருப்பதாகவும், விரைவில் இது சுமூகமாக தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும், நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் நடிகர் வடிவேலுக்கு பதிலாக யோகி பாபு நடிப்பதாக வெளியான தகவலும் உண்மை இல்லை எனவும் தெரியவந்துள்ளது.