மீண்டும் இணையும் குண்டக்க மண்டக்க காம்போ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் காமெடி காம்போவான பார்த்திபன் - வடிவேலு கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணையவுள்ளனர்.

Actor Parthiban and Vadivelu rejoin after 13 years for Suraj film

‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாரதி கண்ணம்மா’, ‘குண்டக்க மண்டக்க’ போன்ற திரைப்படங்களில் பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் கலக்கலான காமெடிக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்திபன் மற்றும் வடிவேலு கூட்டணியில் ஒரு காமெடி திரைப்படம் உருவாகவுள்ளது. இது குறித்து Behindwoods சார்பில் நடிகர் பார்த்திபனை தொடர்புக் கொண்ட போது, இயக்குநர் சுராஜ் இயக்கவிருக்கும் திரைப்படத்தில் தானும், நடிகர் வடிவேலுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வந்த ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்பட விவகாரத்தில் குறித்த பிரச்னை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளது. அந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைத்தவுடன் இந்த படம் ஆரம்பமாகும் என கூறினார்.